TAMIL CHAT ROOM
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Log in

I forgot my password

Latest topics
» tamil chat
தலையெழுத்து EmptyThu Apr 09, 2020 10:39 am by Admin

» Lo♥e is beautiful - Iru kangal Sollum - Kadhal Samrajyam- For Maha
தலையெழுத்து EmptySat Dec 05, 2009 11:15 am by AnnKristine

» No Air - Jordin Sparks
தலையெழுத்து EmptySat Dec 05, 2009 11:12 am by AnnKristine

» Nail Polish Collection
தலையெழுத்து EmptyThu Nov 26, 2009 10:48 pm by olla86

» Know About Yourself
தலையெழுத்து EmptyThu Nov 26, 2009 10:36 pm by olla86

» You have to have brains....
தலையெழுத்து EmptyThu Nov 26, 2009 10:26 pm by olla86

» The problems with GUYS
தலையெழுத்து EmptyThu Nov 26, 2009 10:19 pm by olla86

» Wife with a lover
தலையெழுத்து EmptyThu Nov 26, 2009 10:09 pm by olla86

» PERANMAI NEW MOVIE
தலையெழுத்து EmptySat Nov 21, 2009 5:13 am by J E N N Y

May 2024
MonTueWedThuFriSatSun
  12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

Calendar Calendar

RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 


Social bookmarking

Social bookmarking reddit      

Bookmark and share the address of Tamilprince on your social bookmarking website

Bookmark and share the address of TAMIL CHAT ROOM on your social bookmarking website

You Add
Support

தலையெழுத்து

Go down

தலையெழுத்து Empty தலையெழுத்து

Post  TP Princess Wed Nov 18, 2009 10:43 am

சாதிக்க நினைப்பவனுக்கு ஊனம் ஒரு தடையில்லை என்ற கருத்தை வலியுறுத்தும் படம்தான் தலையெழுத்து.

மருத்துவ சாதனங்களால் உடல் பகுதிகளின் செயல்பாடுகளை துல்லியமாக கண்டுபிடிக்க முடிகிறது. அதுபோல் மனித மூளையின் செயல்பாடுகளை ஏன் கண்டறிய முடியாது என்று வித்தியாசமாக சிந்திக்கிறார் நாயகன் ரிச்சர்ட்ராஜ். இதற்காக ஆராய்ச்சியில் ஈடுபட்டு, புது சாப்ட்வேர் ஒன்றை கண்டுபிடிக்கிறார். இதற்கு இடைஞ்சலாக இருக்கும் அரசியல்வாதி ஒருவர், ரவுடிகளை வைத்து ரிச்சர்ட் ராஜை மிரட்டுகிறார்.

இந்நிலையில் ரிச்சர்ட்ராஜ் அம்மாவை ஒரு விபத்திலிருந்து காப்பாற்றி அவர் மனதில் இடம்பிடித்து பிறகு ரிச்சர்ட்ராஜ் மனதிலும் இடம்பிடித்து காதல் கோட்டை கட்டுகிறார் நாயகி பூஜா காந்தி. திடீரென்று ஒரு விபத்தில் சிக்கிய ரிச்சர்ட்ராஜுக்கு மனநிலை பாதிக்கிறது. ஒரு கட்டத்தில் அவரை இந்த நிலைக்கு மாற்றியதே பூஜாதான் என்று தெரியவருகிறது. பணத்துக்கு ஆசைப்பட்டு, ரிச்சர்ட்ராஜை சித்திரவதை செய்து, அந்த சாப்ட்வேரின் பாஸ்வேர்டைக் கண்டுபிடிக்கிறார் பூஜா. காதலியின் சூழ்ச்சியில் வீழ்ந்த ரிச்சட்ராஜ் எப்படி ஜெயிக்கிறார் என்பது க்ளைமாக்ஸ்.

வித்தியாசமான கதைக்களம். ஆனால் அதை சொன்ன விதம் அதே சினிமா பாணி. படத்தின் கதையை எழுதி கதையின் நாயகனாக ரிச்சர்ட்ராஜ் நடித்துள்ளார்.

முன் பாதியில் சாக்லெட் ஹீரோவாக வலம்வரும் ரிச்சர்ட்ராஜ் பிற்பகுதியில் நடிப்பில் பாஸ்மார்க் வாங்கிவிடுகிறார். விபத்திற்கு பிறகு சக்கர நாற்காலியில் அமர்ந்து, பல்வேறு சித்திரவதைகளை அனுபவிக்கும் போது பரிதாபத்தை அள்ளுகிறார்.

கிளாமர் வேடம் என்றாலும் வில்லத்தனமான நடிப்பில் மிரட்டுகிறார் நாயகி பூஜா காந்தி. குறிப்பாக மருத்துவமனையில் மாறுவேடத்தில் ரிச்சர்ட்ராஜை கண்டுபிடித்து பாஸ்வேர்டை வாங்குகிற காட்சிகள் திக் திக் ரகம். பிறகு போலீஸாரிடம் சிக்கி உயிர் விடுகிறார்.

மிரட்டும் தாதாவாக டேனியல் பாஸ்கர் நடித்திருக்கிறார். பாலாசிங், குள்ள நடிகர் பக்ரு, மீரா கிருஷ்ணன் மட்டுமே தெரிந்த முகங்கள். பக்ருவின் காமெடி கைகொடுக்கவில்லை.

காட்சிகளில் இன்னும் அழுத்தம் சேர்த்து இருக்கலாம். சாப்ட்வேர் கண்டுபிடிப்பு வில்லன் கூட்டத்தின் எதிர்ப்புகளை பிரமாண்டப்படுத்தாதது குறை...

டோமினிக் சேவியோ ஒளிப்பதிவும், காட்வின் இசையும் ஆறுதல்.

விஞ்ஞான ரீதியிலான ஹைடெக் கருவை சமூக அவலங்களுடன் சொல்லியிருக்கும் இயக்குனர் எத்திராஜின் முயற்சி வித்தியாசம் என்றாலும், அதை படமாக்கிய விதம் ஏதோ குறும்படம் பார்த்த உணர்வைத்தான் ஏற்படுத்துகிறது.
TP Princess
TP Princess
Admin

Posts : 65
Points : 196
Reputation : 1
Join date : 2009-10-12
Age : 40

http://www.tamilprince.com

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum