TAMIL CHAT ROOM
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Log in

I forgot my password

Latest topics
» tamil chat
கண்டேன் காதலை - Review in Tamil EmptyThu Apr 09, 2020 10:39 am by Admin

» Lo♥e is beautiful - Iru kangal Sollum - Kadhal Samrajyam- For Maha
கண்டேன் காதலை - Review in Tamil EmptySat Dec 05, 2009 11:15 am by AnnKristine

» No Air - Jordin Sparks
கண்டேன் காதலை - Review in Tamil EmptySat Dec 05, 2009 11:12 am by AnnKristine

» Nail Polish Collection
கண்டேன் காதலை - Review in Tamil EmptyThu Nov 26, 2009 10:48 pm by olla86

» Know About Yourself
கண்டேன் காதலை - Review in Tamil EmptyThu Nov 26, 2009 10:36 pm by olla86

» You have to have brains....
கண்டேன் காதலை - Review in Tamil EmptyThu Nov 26, 2009 10:26 pm by olla86

» The problems with GUYS
கண்டேன் காதலை - Review in Tamil EmptyThu Nov 26, 2009 10:19 pm by olla86

» Wife with a lover
கண்டேன் காதலை - Review in Tamil EmptyThu Nov 26, 2009 10:09 pm by olla86

» PERANMAI NEW MOVIE
கண்டேன் காதலை - Review in Tamil EmptySat Nov 21, 2009 5:13 am by J E N N Y

April 2024
MonTueWedThuFriSatSun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930     

Calendar Calendar

RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 


Social bookmarking

Social bookmarking reddit      

Bookmark and share the address of Tamilprince on your social bookmarking website

Bookmark and share the address of TAMIL CHAT ROOM on your social bookmarking website

You Add
Support

கண்டேன் காதலை - Review in Tamil

Go down

கண்டேன் காதலை - Review in Tamil Empty கண்டேன் காதலை - Review in Tamil

Post  TP Princess Wed Nov 18, 2009 10:31 am

இந்திப் படமான ஜப் வீ மெட்டின் ரீமேக்தான் இந்த கண்டேன் காதலை.

தன் படிப்பை முடித்துவிட்டு சொந்த ஊரான தேனிக்கு ரயிலில் செல்கிறார் தமன்னா. அப்போது அதே ரயிலில் பயணம் செய்யும் பரத்தை சந்திக்கிறார். பின்பு இருவரும் சினேகமாகிறார்கள். பரத் தொழிலதிபர் ராஜசேகரின் மகன். வாழ்க்கையில் தோல்வியுற்று இலக்கில்லாமல் பயணிக்கும் பரத்துக்கு தமன்னாவின் நட்பு, சில ஆரம்ப அறுவைகளுக்குப் பிறகு பிடித்துப் போக தமன்னாவின் ஊரான தேனிக்குப் போகிறார். இன்னொரு பக்கம் முன்னாவைக் காதலிக்கிறார் தமன்னா. தன் வீட்டாரிடம் அதைச் சொல்லத்தான் தேனிக்கும் வருகிறார். ஆனால் வந்த இடத்தில் அவருக்கும் முறைமாமன் சந்தானத்துக்கும் திருமண ஏற்பாடுகள் நடக்கிறது.

அதனால் தன்னை காதலனுடன் சேர்த்து வைக்குமாறு பரத்திடம் சொல்லுகிறார். ஒரு நாள் சொல்லாமல் கொள்ளாமல் வீட்டை விட்டு வெளியேறி தன் காதலன் முன்னாவைத் தேடிப் போகிறார். பரத் தன் வாழ்க்கையைத் தேடிச்சென்று அதில் வெற்றியும் பெறுகிறார். ஆனால் தமன்னா எங்கே போனார் என்று தெரியாமல் தவிக்கும் அவர் குடும்பத்தினர்கள், பரத்துடன் தமன்னா ஓடிவிட்டதாக தவறாக நினைக்கிறார்கள்.

ஒரு கட்டத்தில் மீண்டும் தமன்னா வருகிறார் பரத்தின் வாழ்க்கையில். இவ்வளவு நாள் தமன்னா எங்கிருந்தார்? அவருடைய காதல் என்ன ஆனது? பரத்தின் வாழ்க்கையில் இப்பொழுது ஏன் வருகிறார்? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதில் கிடைக்கிறது இறுதிக் காட்சியில்.

பரத் பளிச்சென இருக்கிறார். ஆனால் நடிக்க நிறையவே வாய்ப்பு இருந்தும் அவற்றையெல்லாம் பயன்படுத்த தவறியிருக்கிறார். பல காட்சிகளில் செயற்கைத்தனம் தாண்டவமாடுகிறது. இருந்தாலும் தமன்னா மீதுள்ள காதலை அவரிடம் சொல்ல நினைக்கும் இடத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

சில இடங்களில் தமன்னா அசத்தினாலும், தேனிப்பொண்ணு கதாபாத்திரம் நிறைய இடங்களில் தமன்னாவுக்கு சற்றும் பொருந்தவில்லை. ஆனாலும் ஜோதிகாபோல் துறுதுறுவென நடிக்க முயற்சி செய்து அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்.

படத்தின் நாயகன் பரத்தா... சந்தானமா என்று நினைக்கும்படி சும்மா அசத்தியிருக்கிறார் சந்தானம். அவர் அறிமுகமாகும் ஆரம்ப காட்சியிலே களைகட்டுகிறது திரையரங்கம். சந்தானமும் காட்சிக்கு காட்சி கவுண்டமணி பாணியில் நகைச்சுவையில் அமர்க்களப்படுத்துகிறார். எங்கே தமன்னாவை பரத் தள்ளிட்டுப் போய்விடுவாரோ என்ற பயத்தில் வீட்டில் உள்ள பெருசுகளை தன்பக்கம் இழுக்க, சந்தானம் செய்யும் வேலைகள் அட்டகாசம்.

சிங்க முத்து, மனோபாலா, அழகம் பெருமாள், ரவிச்சந்திரன், முன்னா, நிழல்கள் ரவி என நிறைய நட்சத்திரங்கள். அவரவர் பாத்திரங்களை நிறைவாகவே செய்திருக்கிறார்கள்.

தமன்னாவை ஊட்டியில் உள்ள காதலன் முன்னாவிடம் சேர்த்துவிட்டு பரத் புறப்பட்டதும் அடுத்து கதை எத்திசையில் செல்லப்போகிறது என்று யூகிக்க முடியவில்லை.

தன்னை தேடி வந்த தமன்னாவை திருமணம் செய்துகொள்ள முடியாது எனச் சொல்லி திருப்பி அனுப்பிவிட்டதாக முன்னா கூறியதும் பரத்தைப்போலவே எல்லோருக்குமே அதிர்ச்சி.

மதுரை டூ தேனி செல்வதே பெரும்பாடாக இருக்க இடைவேளையில் அருவிக்குளியல், ஆட்டம் பாட்டம் எல்லாம் தமிழ் திரையுலகில் மட்டுமே சாத்தியமான விஷயம்.

பட்டுக்கோட்டை பிரபாகரின் வசனங்கள் சில இடங்களில் மனதை தொட்டுவிட்டுச் செல்கிறது. ஊட்டியின் அழகை கண்களுக்கு விருந்தாக படைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா. வித்யாசாகரின் இசையில் பாடல்கள் ஏனோ மனதை தொடவில்லை. பின்னணி இசை பரவாயில்லை.

படத்தில் அதிரடித் திருப்பங்கள் இல்லையென்றாலும், அடுத்தடுத்த காட்சிகள் விறுவிறுப்பாக இருக்குமளவுக்கு இயக்குனர் ஆர்.கண்ணன், திரைக்கதை அமைத்திருப்பது படத்தை ஒரே சீராக கொண்டு செல்ல உதவுகிறது.

படம் முழுவதும் வரும் சந்தானத்தின் நகைச்சுவை ஒரு பொழுதுபோக்கு படமாக கண்டேன் காதலையை ரசிக்க வைக்கிறது.
TP Princess
TP Princess
Admin

Posts : 65
Points : 196
Reputation : 1
Join date : 2009-10-12
Age : 40

http://www.tamilprince.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum