Log in
Latest topics
Social bookmarking

Bookmark and share the address of Tamilprince on your social bookmarking website
Bookmark and share the address of TAMIL CHAT ROOM on your social bookmarking website
Support
ஆறுமுகம்
Page 1 of 1 • Share •
ஆறுமுகம்
ஏழை இளைஞனுக்கும், பணக்கார பெண்ணுக்கும் நடக்கும் மோதலே கதை.
ரோட்டோரம் தள்ளுவண்டியில் இட்லி கடை நடத்தும் நாயகன் பரத்தும், கோடீஸ்வரி ரம்யா கிருஷ்ணனின் ஒரே தம்பி சத்யாவும் உயிர் நண்பர்கள். அந்தஸ்து பார்க்காமல் பழகி வரும் இவர்களின் நட்பு ரம்யா கிருஷ்ணனுக்குப் பிடிக்கவில்லை. சதித்திட்டம் தீட்டி நண்பர்களை பிரிக்கிறார். கூடவே பரத்தின் நிலத்தை ஏமாற்றி அபகரிப்பவர் அதில் இருக்கும் பரத் அம்மாவின் கல்லறையையும் இடிக்கப் பார்க்கிறார். இதைக்கண்டு ஆவேசமாகும் பரத், ரம்யாகிருஷ்ணனுடன் மோதலில் இறங்குகிறார். பணத்தையும் புகழையும் அழித்து தெருவுக்கு கொண்டு வருவேன் என சவால் விடுகிறார். சவாலை நிறைவேற்றினாரா? இல்லையா? என்பதே க்ளைமாக்ஸ்.
இடுப்பில் துண்டை கட்டிக் கொண்டு கொட்டும் மழையில் ரம்யா கிருஷ்ணனுக்கு சவால் விடுவதிலிருந்து, தாயின் சமாதியை இடிப்பவர்களை சமட்டித் தள்ளுவது வரை "அண்ணாமலை"யை ஞாபகப்படுத்தினாலும், அழுக்கு உடம்பு, கழுத்தில் துண்டு என இட்லி கடைக்காரருக்கு கனக்கச்சிதமாக பொருந்துகிறார் பரத். கூடவே முறைப்பெண் ப்ரியாமணியை காதலிப்பதிலும், அவருடனான தூக்கலான பாடல் காட்சியிலும் இளமை துள்ளாட்டம் போடுகிறார்.
பரத்திற்கு ஜோடியாக ப்ரியாமணியை பார்க்கும் போதெல்லாம் அக்கா பாசம்தான் ஞாபகத்திற்கு வருகிறது. இதனாலேயே ப்ரியாமணி அவ்வளவு கவர்ச்சி காட்டியும் பிடித்தம் ஏற்படாமல் போவது வருத்தம்.
"படையப்பா" நீலாம்பரியை மறுபதிப்பு செய்திருக்கிறார் ரம்யா கிருஷ்ணன். வயதானாலும், அந்த திமிர் பார்வையும், போதை குரலும், ஸ்டைல் நடையும் பிரமிக்க வைக்கிறது. வில்லி என்பதை விட ஆன்ட்டி ஹீரோயின் எனலாம். கருணாஸ், சத்யா, சரண்யா மோகன், இளவரசு, சீதா என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே இருந்தாலும் படத்திற்கு ஒரே ஆறுதல் ரம்யா கிருஷ்ணன் மட்டும்தான் என்றால் மிகையல்ல..!
இட்லிக் கடையில் செய்யும் அலப்பறைகளால் கலகலப்பூட்டுகிறார் கருணாஸ். அபிநய், இளவரசு, மகாதேவன் ஆகியோரும் ஏனோ வந்து போகின்றனர்.
ஒரே பாடலில் நாயகன் கோடீஸ்வரனாவது, தெருவோரம் இட்லி விற்பவனுக்கு உலக அழகி ரேஞ்சில் காதலி இருப்பது, கடைசி நிமிடத்தில் வில்லி மனம் திருந்துவது... என சினிமாத்தனமான விஷயங்களை எவ்வளவு நாளைக்குத்தான் தொடரப்போறாங்களோ!
ரம்யா கிருஷ்ணனை வீழ்த்த பரத், பாதி விலைக்கு குடியிருப்புகள் கட்டிக் கொடுக்கும் காட்சியில் சற்று விறுவிறுப்பை ஏற்படுத்துகிறது படம்.
கதையில்தான் பழைய நெடி என்றால், காட்சியிலாவது புதுமை செய்திருக்கலாம் இயக்குனர்! மழையில் இடுப்பு துண்டுடன் ரம்யாவுக்கு பரத் சவால்விடும் காட்சியை கூடவா மாற்றக் கூடாது? அதிலும் "அண்ணாமலை" நெடி.
தளபதி தினேஷின் சண்டைகாட்சிகள், எஸ்.கே.பூபதியின் ஒளிப்பதிவு உள்ளிட்டவைகள் ஆறுமுகத்தை தாங்கி பிடிக்கின்றன. தேவாவின் பாடல்கள் சற்று பெரிய இடைவெளிக்குப் பின் மீண்டும் மெலடி ஆறுதல்! சூப்பர் ஸ்டார் ரேஞ்சுக்கு ஒரு ஆக்ஷன் படத்தில் நடிக்க வேண்டும் என்று துணிந்து இறங்கியிருக்கும் பரத்தின் ஆசையை பாரபட்சம் பார்க்காமல் நிறைவேற்றி வைத்திருக்கிறார் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா. மத்தபடி ஆறுமுகத்தை பாராட்டுகிற அளவுக்கு எதுவும் இல்லை.
அரைத்த மாவையேதான் திருப்பி அரைப்பார்கள் என்பதற்கிணங்க தான் எடுத்த "அண்ணாமலை" படத்தையே அப்படியே உட்டாலங்கடி செய்து ஆறுமுகமாக மாற்றியிருக்கும் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணாவை என்ன சொல்லி பாராட்டுவது?

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
» No Air - Jordin Sparks
» Nail Polish Collection
» Know About Yourself
» You have to have brains....
» The problems with GUYS
» Wife with a lover
» PERANMAI NEW MOVIE
» Christmas Wishes - II