TAMIL CHAT ROOM
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Log in

I forgot my password

Latest topics
» tamil chat
சா பூ த்ரி EmptyThu Apr 09, 2020 10:39 am by Admin

» Lo♥e is beautiful - Iru kangal Sollum - Kadhal Samrajyam- For Maha
சா பூ த்ரி EmptySat Dec 05, 2009 11:15 am by AnnKristine

» No Air - Jordin Sparks
சா பூ த்ரி EmptySat Dec 05, 2009 11:12 am by AnnKristine

» Nail Polish Collection
சா பூ த்ரி EmptyThu Nov 26, 2009 10:48 pm by olla86

» Know About Yourself
சா பூ த்ரி EmptyThu Nov 26, 2009 10:36 pm by olla86

» You have to have brains....
சா பூ த்ரி EmptyThu Nov 26, 2009 10:26 pm by olla86

» The problems with GUYS
சா பூ த்ரி EmptyThu Nov 26, 2009 10:19 pm by olla86

» Wife with a lover
சா பூ த்ரி EmptyThu Nov 26, 2009 10:09 pm by olla86

» PERANMAI NEW MOVIE
சா பூ த்ரி EmptySat Nov 21, 2009 5:13 am by J E N N Y

March 2024
MonTueWedThuFriSatSun
    123
45678910
11121314151617
18192021222324
25262728293031

Calendar Calendar

RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 


Social bookmarking

Social bookmarking reddit      

Bookmark and share the address of Tamilprince on your social bookmarking website

Bookmark and share the address of TAMIL CHAT ROOM on your social bookmarking website

You Add
Support

சா பூ த்ரி

Go down

சா பூ த்ரி Empty சா பூ த்ரி

Post  TP Princess Wed Nov 18, 2009 10:39 am

அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் மூன்று ஐ.டி., இளைஞர்களும், அவர்கள் சந்திக்கும் பெண்களும்தான் கதை.

கல்லூரி மாணவர் அர்ஷத்கான். இவர் முப்பது வயதை தாண்டிய நடுத்தர வயது பெண்களை சுற்றுகிறார். ஒரு பெண் மேல் அளவு கடந்த காதல்கொள்கிறார். ஆனால் அப்பெண்ணோ ஜிம் நடத்தும் வாலிபருடன் ஓடுகிறார். இதனால் வெறுப்பாகி போகிறார்.

இன்னொரு இளைஞனான பிரஜின் திருமணமானவர் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை. மனைவியும் வேலை பார்க்கிறார். இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பட்டும் படாமல் வாழ்கின்றனர். மனைவி செல்போன் நம்பரில் ஒருவன் கிராஸ் ஆகிறான். அவனுக்கு இரவு பகலாய் மெசேஜ் அனுப்பி ஈர்ப்பாகிறாள். அதுபோல் பிரஜினுக்கும் செல்போன் தோழி கிடைக்கிறாள்.

மூன்றாவதாக படிப்பை முடித்து ஊர்சுற்றும் அக்ஷய், வீட்டில் பார்க்கும் மிதுனாவை மணக்க மறுத்து, காதலி பிங்கியை மணக்க நினைக்கிறார். காதல் கைகூடி திருமணத்துக்கு சம்மதம் கிடைக்கும்போது அதை ஏற்காமல் மிதுனாவை காதலிப்பதாக கூறி குழப்புகிறார்.

இந்த மூன்று பேர்களின் நிலைமை என்னவாகிறது என்பதை காதல் லீலைகளோடு சொல்கிறது இறுதிக்காட்சி.

திருமணத்துக்கு முன்பிருந்த காதல் ஜோடிகள் பிரஜின்-சாராவின் நெருக்கம், தம்பதிகளான பிறகு குறைந்துபோவது யதார்த்தம். மனதிற்குள் புழுங்கும் சாரா மற்றொரு பாய்பிரண்டை மொபைல்போன் மூலம் தேடுவதும், அதேபோல் கேர்ள் பிரண்டை பிடிக்க பிரஜின் சாட் செய்வதும் ருசியோ ருசி. வெவ்வேறு பெயர்களில் இவர்கள் இருவருமே மெசேஜ் பரிமாறிக்கொள்வது ட்விஸ்ட். ஒரு கட்டத்தில் இருவரும் சந்திப்பதற்காக ஒருவருக்கு தெரியாமல் ஒருவர் செல்லும் காட்சியில் விறுவிறுப்பு!

நடுத்தர வயதுப் பெண்களுக்கு தூண்டில்போடும் அர்ஷத்கான், சில காட்சிகளில் சிரிக்க வைக்கிறார். சில காட்சிகளில் அதற்கு முயற்சிக்கிறார். காதலி அக்ஷயாவின் "பிறந்தநாளில்" உஜ்ஜயினியை பார்த்து ஜொள்ளுவிடும் அர்ஷத், அவரை சைட் அடிப்பதற்காகவே அக்ஷயா வீட்டுக்கு வருவதும், மொட்டை மாடியில் நின்றபடி அவரை லுக் விடுவதும் வயிற்றை பதம் பார்க்கிறது. ஆனால் சில இடங்களில் "ஏ" வகையை தாண்டி முகம் சுளிக்க வைக்கிறார்.

இரண்டு பேரை காதலிப்பதாலோ என்னவோ அதிக இடத்தை ஆக்ரமித்துக் கொள்பவர் அக்ஷய்தான். மிதுனாவை பெண் பார்த்துவிட்டு கல்யாணத்திற்கு மறுக்கும் அவர், பின்பு அவரையே காதலிக்க அலைவதும் சுவாரஸ்யம்தான்.

மிதுனா, சாரா, அக்ஷயா, உஜ்ஜயினி, பிங்கி, ரிஷ்வந்த் என படத்தில் மொத்தம் ஆறு நாயகிகள்! அதில் மிதுனா, சாரா கேரக்டரில் ஒன்றியுள்ளனர். அர்ஷத்கான் துரத்தி துரத்தி காதலிக்கும் அஞ்சு ஆன்ட்டி கதாபாத்திரமும் பிரமாதம்.

இரட்டை அர்த்த வசனங்கள், ஆன்ட்டி வீட்டு பாத்ரும் காட்சி, அர்ஷத், ஷூ பாலிஷ் காட்சியெல்லாம் ஓவர்.

அப்பாஸ் ரஃபியின் இசை கேட்கலாம் ரகம். பி.எல்.சஞ்சய் ஒளிப்பதிவு தெளிவு.

கதையே இல்லாத இந்த படத்தில் காதல் லீலைகளுக்கும், காம களியாட்டங்களுக்கும் பஞ்சமே இல்லை. ஆபாசத்துக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்திருக்கும் இயக்குனர் அர்ஷத்கான், இறுதியில் இதையெல்லாம் செய்யாதீங்க என்று அறிவுரை செய்வது எந்த விதத்தில் நியாயம்?

வெவ்வேறு குணம் கொண்ட மூன்று ஜோடிகளின் கதையை தனித்தனியாக சொல்வதுபோல் ஆரம்பித்து காதலை வக்கிரமாக காட்டி, முகம் சுளிக்க வைக்கிறார்கள் பார்வையாளர்களை.
TP Princess
TP Princess
Admin

Posts : 65
Points : 196
Reputation : 1
Join date : 2009-10-12
Age : 40

http://www.tamilprince.com

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum